அதானி குழுமம், பிபிசி ஆவணப்படம்; நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப திமுக எம்பிகளுக்கு மு.க ஸ்டாலின் அட்வைஸ்..!! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை மறுநாள் (ஜன.31) தொடங்க உள்ள நிலையில் நடபாண்டின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் என்பதால் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் கூட்டத் தொடர் தொடங்க உள்ளது. இதனை தொடர்ந்து வரும் பிப்ரவரி 1ம் தேதி 2023-2024 ஆம் நிதி ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். 

தற்போதைய பாஜக அரசின் கடைசி நிதிநிலை அறிக்கை என்பதால் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இரு கட்டங்களாக நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

வரும் ஜனவரி 31ஆம் தேதி முதல் பிப்ரவரி 13ஆம் தேதி வரை முதல் அமர்வாகவும், மார்ச் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை இரண்டாவது அமர்வாகவும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து நாளை (ஜன.30) அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தை மத்திய பாஜக அரசு கூட்டம் உள்ளது.

இந்த நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து திமுக எம்பிக்களின் ஆலோசனை கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுகவைச் சேர்ந்த மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் தமிழகத்தின் முதன்மை பிரச்சனைகளான நீட் மசோதா, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை, சேது சமுத்திரத் திட்டம் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்புவது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய பாஜக அரசு நெருக்கடி தரும் விதமாக குஜராத் கலவரம் குறித்து பிபிசி வெளியிட்ட ஆவணப்படத்திற்கு தடை விதித்தது குறித்து கேள்வி எழுப்புமாறு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

அதேபோன்று அதானி குழுமத்தின் மோசடிகள், வங்கி கடன்கள் குறித்து கேள்வி எழுப்ப வேண்டும் என மு.க ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார். நீட் தேர்வு விலக்கு மசோதா, சேது சமுத்திர கால்வாய் திட்டம், நீதித்துறை மீதான மத்திய அரசின் விமர்சனங்கள், அரசியல் சாசனத்தின் மீது மத்திய அரசின் போக்கு போன்றவற்றை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் திமுக எம்பிக்கள் கேள்வி எழுப்ப வேண்டும் என முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MkStalin instructs DMK MPs to question Adani BBCdocumentary in Parliament


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->