இனி தான் ஆட்டமே ஆரம்பம்.. பாஜகவுக்கு மு.க ஸ்டாலின் நெத்தியடி.!! - Seithipunal
Seithipunal


திமுகவின் இளைஞர் அணி மாநாடு இந்தியாவில் புதிய வரலாறு படைக்கட்டும் என்ற தலைப்பில் திமுக தொண்டர்களுக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் குறிப்பாக "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குப் போட்டியாக, நியமனப் பதவியில் உள்ள ஆளுநர்களை வைத்து அரசாங்கத்தை நடத்த நினைப்பதா?

ஆளுநர்களை வைத்து அரசாங்கத்தை நடத்த நினைக்கும் எதேச்சதிகாரப் போக்கு இந்திய அரசியல் சட்டத்திற்கே எதிரானது.ஆளுநர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட உயர்ந்த பொறுப்புக்குச் சிறிதும் தகுதியில்லாமல் தரம்தாழ்ந்த அரசியல் செய்வதை இந்தியா இப்போதுதான் காண்கிறது

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு தொண்டர்களை ஆயத்தப்படுத்தும் பயிற்சிப் பாசறையாக அமையவிருக்கிறது சேலம் இளைஞரணி மாநில மாநாடு. திருவள்ளுவரில் தொடங்கி தெருவில் நடந்து போவோர் வரை எல்லார் மீதும் காவிச் சாயம் பூசுவதை ஒன்றிய ஆட்சியாளர்களே முன்னின்று செய்கின்றனர். ஒன்றிய ஆட்சியாளர்களின் மூர்க்கத்தனமான அரசியலை ஜனநாயக வழியில் முறியடிக்கும் வலிமை திமுகவிற்கு உண்டு. 

ஜனநாயகத்தின் அடர்ந்த இரண்டு காலத்தில் இருந்து இந்தியாவை மீட்டெடுப்பதற்கான முன்னெடுப்புகளை இந்தியா கூட்டணி தொடங்கியுள்ளது. மீண்டும் ஒரு விடுதலை வெளிச்சம் நிறைந்த காலத்தினை மக்கள் காண்பதற்கு இந்தியா கூட்டணியின் முன்னெடுப்புகள் தொடங்கியுள்ளன.

சேலத்தில் நடைபெறும் இளைஞரணி மாநாடு கூடக் கலையும் நிகழ்வல்ல, கொள்கையை கூர்த்தீட்டும் உலைக்களம். ஒன்றிய ஆட்சியாளர்களின் மூர்க்கத்தனமான அரசியலை ஜனநாயக வழியில் முறியடிக்கும் வலிமை திமுகவுக்கு உண்டு" என தெரிவித்துள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mkStalin criticized governor Ravi BJP 18012024


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->