#BREAKING | நெல்லை பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த அமைச்சர்.!! - Seithipunal
Seithipunal


நெல்லை மனோன்மணி சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவை தற்போதைய உயர்கல்வி அமைச்சர் ராஜ கண்ணப்பன் புறக்கணித்த உள்ளார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 30வது பட்டமளிப்பு இன்று நடைபெற்று வருகிறது. இந்த விழா‌ அழைப்பிதழில் உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பெயர் இடம்பெற்றிருந்த நிலையில் அவர் பங்கேற்கவில்லை.

இதனையடுத்து ஆளுநர், சிறப்பு விருந்தினர், துணை வேந்தர் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர். மேலும் மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் மற்றும் பதக்கங்களை ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கினார். 

உயர் கல்வித் துறைக்கு புதிய அமைச்சராக ராஜ கண்ணப்பன் பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் 2வது பட்டமளிப்பு விழாவை அவர் புறக்கணித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு சட்டப்பேரவை கூட உள்ள நிலையில் ஆளுநரை தமிழக அரசு புறக்கணிப்பது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister rajakannapan ignore graduation function


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->