பாஜக அரசுக்கு எதிராக தமிழக அரசு கொண்டுவந்த தீர்மானம்.. ஆதரவளித்த நயினார் நாகேந்திரன்.!! - Seithipunal
Seithipunal


கடந்த 18ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. அன்றைய தினம் தமிழக பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அடுத்த நாளான 19ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை அடுத்து பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கூடியது. 

இன்று பொது பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். 

இதனிடையே மேகதாது அணைக்கு எதிராக சட்டப் பேரவையில் தீர்மானத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முன்மொழிந்தார். தமிழக சட்டப்பேரவை கர்நாடக அரசின் செயலுக்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்கிறது. மேகதாதுவில் அணை கட்ட எந்தவித அனுமதியும் மத்திய அரசு கொடுக்கக்கூடாது என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட மேகதாது விவகாரம் தொடர்பான தனித்தீர்மானத்திற்கு பாஜக ஆதரவு அளிப்பதாக பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். பாஜக தனிப்பட்ட முறையில் மத்திய அரசிடம் இது குறித்து நிச்சயமாக வலியுறுத்துவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, மேகதாது அணைக்கு எதிரான தமிழக அரசின் தீர்மானத்திற்கு பாமக ஆதரவு அளிப்பதாக பாமக தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட மேகதாது குறித்த தனித்தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு அளித்துள்ளது. இது குறித்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, காவிரி விவகாரத்தில் அதிமுக ஆட்சியில் பல்வேறு சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. மேகதாது அணை கட்ட கர்நாடகாவை அனுமதிக்க கூடாது என முதல்வராக இருந்தபோது பிரதமரிடம் வலியுறுத்தினேன். மேகதாது அணையால் தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mekadatu dam issue tn bjp support for dmk govt


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->