முதலமைச்சர் கான்வாய் வாகனத்தில் மேயர் தொங்கிய விவகாரம்.. மேயர் பிரியா விளக்கம்.! - Seithipunal
Seithipunal


கடந்த 2 நாட்களுக்கு முன் மாண்டஸ் புயல் மற்றும் வெள்ளமழை பாதிப்புகள் குறித்து சென்னை கொட்டிவாக்கம் பாலவாக்கம் பகுதிகளில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து காசிமேடு மீன் பிடி துறைமுகத்துக்கு சென்ற முதலமைச்சர் மு க ஸ்டாலின் சேதம் அடைந்த படகுகளை பார்வையிட்டார். மேலும் மீனவர்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது முதலமைச்சர் மு க ஸ்டாலின் அமைச்சர் கே என் நேரு சேகர் பாபு பாலசுப்ரமணியன் உடன் காசிமேட்டிற்கு தனது காண்வாயில் சென்ற போது சென்னை மேயர் பிரியா மற்றும் ஆணையர் ககன் தீப் சிங் பேடி உள்ளிட்டோர் முதலமைச்சர் கான்வாயில் தொங்கியபடி சென்றனர்.  

இந்த நிலையில் இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிய நிலையில் பல்வேறு தரப்பினரும் கடும் விமர்சனங்களை தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் இது மேயர் ப்ரியா பேசியதாவது, முதலமைச்சர் ஆய்வு செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆனால் நாங்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு முதல்வர் செல்வதற்கு முன்பாகவே சென்று ஏற்பாடுகளை கவனிக்க வேண்டும்.

அந்த 2 இடங்களுக்கும் உள்ள தொலைவு அதிகம் என்பதால் நாங்கள் நடந்து சென்று கொண்டிருந்தோம். அப்போது அவ்வழியாக சென்ற முதல்வரின் கான்வாய் வாகனம் வந்தது. உடனடியாக செல்ல வேண்டும் என்பதால் அதில் ஏறி சென்றோம்.

மேலும், முதல்வர் வாகனத்தில் செல்லுமாறு யாரும் எங்களை கட்டாயப்படுத்தவில்லை. இது இந்த அளவுக்கு சர்ச்சையாகும் என்று நான் கொஞ்சம் கூட நினைக்கவில்லை என தெரிவித்துள்ளார். 

மேலும், மேயர் ஒரு பெண்ணாக கன்வாய் வாகனத்தில் தொங்கி சென்றதை ஒரு துணிச்சலான செயலாக நாம் அனைவரும் பார்க்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mayor Priya explained CM Convoy footboard controversy


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->