காங்கிரஸுடன் கைகோர்க்கும் மம்தா பானர்ஜி.?! ஓபன் ஸ்டேட்மென்ட் கொடுத்த மேற்கு வங்க முதல்வர்.!  - Seithipunal
Seithipunal


பாஜகவை தேர்தலில் தோற்கடிக்க காங்கிரஸுடன் இணைந்து போட்டியிட திரிணாமுல் காங்கிரஸ் தயாராக இருப்பதாக மம்தா பானர்ஜி கூறியுள்ளார். 

நடைபெற்று முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தை தவிர்த்து மற்ற மணிப்பூர், உத்தரகாண்ட், கோவா மற்றும் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. 

இத்தகைய நிலையில், இந்த தேர்தல் முடிவுகள் குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசியபோது, "2024 பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி விருப்பப்பட்டால் அவர்களுடன் இணைந்து போட்டியிட தயார். 

காங்கிரஸ் தங்களது தேர்தல் முடிவுகள் குறித்து கவலை கொள்ள வேண்டாம். நேர்மையாக சிந்தனை செய்யுங்கள். பாஜக வெற்றி பெற்றுள்ளது வரும் காலத்தில் அவர்களுக்கு மிகப்பெரிய இழப்பாக இருக்கும். 

வாக்கு இயந்திரங்களில் பல முறைகேடுகள் நடந்திருக்கக் கூடும். சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் வாக்குப்பதிவு எந்திரங்களை தடவியல் சோதனைக்கு கட்டாயம் உட்படுத்த வேண்டும். அகிலேஷ் யாதவின் வாக்குவங்கி கூட 20-லிருந்து 37-ஆக அதிகரித்து இருக்கிறது." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mamta banarjee said she ready to allaince with congress


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->