ஸ்டாலினுக்கு மம்தா மேற்கு வங்கத்திலிருந்து கொண்டு வந்த ஸ்பெஷல் பரிசு.!  - Seithipunal
Seithipunal


மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்துள்ளார். 

மேற்குவங்க முதல்வராக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மம்தா பானர்ஜி இருந்து வருகிறார். மேற்குவங்க ஆளுநராக தமிழகத்தை சேர்ந்த இல.கணேசன் இருக்கிறார். 

இந்த நிலையில், இல.கணேசன் இல்லத்தில் நடந்த ஒரு விழாவில் பங்கெடுப்பதற்காக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று தமிழகத்திற்கு வருகை புரிந்தார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் அவர் தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்திப்பதாக இருந்தது. 

இந்த சந்திப்பின் போது அவர்கள் அடுத்ததாக நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தல் கூட்டணிகள் வியூகங்கள் குறித்து பேசுவார்கள் என்று கூறப்பட்டது. 

இத்தகைய நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் வைத்து மம்தா பானர்ஜி சந்தித்துள்ளார். ஸ்டாலினை சந்தித்தபோது கொல்கத்தா இனிப்பு வகைகளை ஸ்டாலினுக்கு அவர் பரிசாக வழங்கியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mamata banarjee meet stalin in chennai


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->