வியூகத்தை மாற்றிய பாஜக! காங்கிரசுக்கு செக்.!! குமாரசாமிக்கு அடித்த ஜாக்பாட்!! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநில பொது தேர்தல் கடந்து மே 10ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்து உள்ளது. கடந்த தேர்தலில் 105 இடங்களில் வெற்றி பெற்று இருந்த பாஜக இம்முறை 66 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. முன்னாள் முதல்வர் குமாரசாமி தலைமையிலான மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி 19 இடங்களிலும் வெற்றி பெற்றது. 

இதனை தொடர்ந்து கர்நாடக மாநில முதலமைச்சராக சித்தராமையாவும், டி.கே சிவகுமார் துணை முதலமைச்சராகவும் நீண்ட இழுபறிக்கு பிறகு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த நிலையில் கர்நாடக மாநில எதிர்க்கட்சித் தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. கர்நாடகாவில் 66 தொகுதிகளை பெற்றுள்ள பாஜக பலம் வாய்ந்த எதிர்க்கட்சியாக இருக்கும்போது 19 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற மதசார்பற்ற ஜனதள கட்சி தலைவர் குமாரசாமி எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலை கருத்தில் கொண்டு பாஜக குமாரசாமியுடன் கூட்டணி அமைக்கும் நோக்கில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை விட்டுக் கொடுக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் பாஜக உடனான கூட்டணிக்கு குமாரசாமியும் சம்மதம் தெரிவித்துள்ளதால் டெல்லியில் நடைபெறும் பாஜக ஆலோசனை கூட்டத்திற்கு முன்பே கர்நாடக மாநில எதிர்க்கட்சித் தலைவராக மதசார்பற்ற ஜனதா கட்சி தலைவர் குமாரசாமி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கர்நாடக மாநில அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kumaraswamy chance to elect as karnataka opposition leader


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->