#கேரளா || தொடர் குண்டுவெடிப்பு விவகாரம்.. மத்திய அமைச்சர் மீது பாய்ந்த வழக்கு!! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் கிறிஸ்தவ மதவழிபாட்டு கூட்டத்தில் திடீரென 3 குண்டுகள் தொடர்ந்து வெடித்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த தொடர் குண்டு வெடிப்பில் சம்பவ இடத்திலேயே ஒரு பெண் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், 52 பேர் படுகாயமடைந்து பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் 18 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்து இருந்தார். இந்நிலை திருச்சூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கொடக்கரா பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் மார்ட்டின் என்பவர் குண்டு வெடிப்புக்கு நான்தான் காரணம் என சரணடைந்தார். மேலும், சமுக வளையத்தில் வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டு இருந்தார். 

அதில் சபையின் செயல்பாடு தனக்கு பிடிக்கவில்லை என்பதால் கடந்த 4 ஆண்டுகளாக ஜெப கூட்டங்களுக்கு செல்வதில்லை. எனவே யூடியூப் பார்த்து குண்டு தயாரித்து ஜெபக்கூட்டத்தில் வைத்ததாக அந்த வீடியோவில் தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் குண்டு வெடிப்பு நிகழ்த்திய மார்ட்டின் வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்திய பொருட்கள், ரிமோட் உள்ளிட்டவற்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

இதன் மூலம் இந்த தொடர் குண்டு வெடிப்பை நிகழ்த்தியது மார்டின் தான் என்பதை போலீசார் உறுதி செய்துள்ளனர். இதற்கிடையே மத்திய தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜூ சந்திரசேகரன் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்ததோடு சிறுபான்மை இன மக்களை திருப்திப்படுத்தும் வகையில் ஆட்சி நடைபெற்று வருவதாகவும், மதரீதியிலான தீவிரவாதம் கேரளாவில் வளர்ந்து வருவதாகவும் அந்த பதிவில் குற்றம் சாட்டை இருந்தார்.

அதன் பிறகு குற்றவாளி யார் என தெரிய வந்த பிறகு இந்த விவகாரம் திசை திருப்பப்படுவதாகவும் குற்றம் சாட்டி இருந்த நிலையில் அதற்கு கேரள மாநில முதல்வர் பினராய் விஜயன் பதிலடி கொடுத்திருந்தார். இந்த நிலையில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கொச்சி மாநகர போலீசார் மத்திய இணை அமைச்சர் ராஜூ சந்திரசேகர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala police case registered against Union minister


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->