பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் திமுகவிற்கு பங்கு.. முக்கிய புள்ளி பரபரப்பு பேட்டி.!! - Seithipunal
Seithipunal


சென்னை தி நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 3 மதுபாட்டில்கள் மூலம் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பாக துணை ஆணையர் தலைமையில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி, வினோத் என்பவரை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பாஜகவை சார்ந்த கராத்தே தியாகராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, பாஜக அலுவலகம் மீது நேற்று 1:30 மணி அளவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. 15 ஆண்டுகளுக்கு முன்பு இதே போன்ற சம்பவம் திமுகவின் பங்குடன் நடைபெற்றது.

பெட்ரோல் குண்டு சம்பவம் தொடர்பாக தமிழக அரசின் செயலை கண்டிக்கிறோம். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இது போன்ற விஷயங்களுக்கு பாஜகவினர் பயப்பட மாட்டோம் என தெரிவித்துள்ளார். இதனிடையே கைது செய்யப்பட்ட வினோத், பெட்ரோல் குண்டு வீசியது குறித்து காவல்துறையில் வாக்குமூலம் கொடுத்துள்ளார். நீட் தேர்வு தொடர்பாக பாஜகவின் நிலைப்பாடு கருத்தில் கொண்டு பெட்ரோல் குண்டு வீசியதாக அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

karate thiagarajan press meet about kamalalayam petrol bomb blast


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->