அண்ணாமலை "அரசியல் தரத்தை தாழ்த்துகிறார்"..! - திமுக எம்பி கனிமொழி கடும் கண்டனம்.!! - Seithipunal
Seithipunal


தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது அண்மையில் தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அளித்த பேட்டி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அது குறித்து அருவருக்கத்தக்க கொச்சையான வார்த்தைகளால் கருத்து தெரிவித்ததாக இணையதள வாசிகளும் அரசியல் கட்சி பிரமுகர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் மேலும் அவர் ஊடகவியலாளரிடம் மன்னிப்பு கோர வேண்டும் எனவும் ஊடகவியலாளர் சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் நேற்று இரவு செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நான் கூறிய கருத்து வட்டார வழக்கு மொழியனவும் அதனால் தான் மன்னிப்பு கூற முடியாது எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

மேலும் நேற்று இரவு அளித்த பேட்டியின் போதும் கொச்சையான வார்த்தைகளால் விமர்சனம் செய்ததாக அண்ணாமலை மீது மீண்டும் புகார் அளித்துள்ளது.

இந்த நிலையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக துணை பொதுச் செயலாளர் ஆன கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் அண்மையில் பாஜக தலைவர் திரு. அண்ணாமலை ஒரு மாநிலத்தின் அமைச்சர் குறித்தும், மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் குறித்தும் தரம் தாழ்ந்த வகையில் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தொடர்ந்து இவ்வாறு ஒருவர் பேசிவருவது அரசியலின் தரத்தையே தாழ்த்துகிறது. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்" என தனது கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanimozhi condemned BJP Annamalai


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->