மத்திய பிரதேச அரசியலில் திடீர் திருப்பம்.. எதிர்க்கட்சித் தலைவர் ராஜினாமா.!! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனிடையே எதிர்க்கட்சித் தலைவராக உள்ள முன்னாள் முதல்வர் கமல்நாத் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் எழுதிய கடிதத்தில், உங்களது ராஜினாமா கடிதத்தை, காங்கிரஸ் தலைமையை ஏற்றுக் கொண்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவராக உங்கள் பங்களிப்பை காங்கிரஸ் கட்சி முழு மனதுடன் பாராட்டுகிறது.  மேலும், மத்திய பிரதேசத்தில் எதிர்க்கட்சித் தலைவராக கோவிந்த் சிங்கை நியமிக்கவும், காங்கிரஸ் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார் என தெரிவித்துள்ளனர். 

மூத்த காங்கிரஸ் தலைவரான கோவிந்த் சிங் மத்திய பிரதேசத்தில் லஹர் தொகுதி எம்எல்ஏ ஆவார். எதிர்க்கட்சி தலைவர் பதவியை  ராஜினாமா செய்தலும், கமல்நாத் கட்சியின் மாநில தலைவர் பதவியில் தொடர்கிறார். ஒருவருக்கு ஒருவர் என்ற அடிப்படையில் அவர் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kamal nath resigns


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->