இன்றைய வரலாறு.. இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிறந்த தினம்.!  - Seithipunal
Seithipunal


இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், 1950ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி குஜராத் மாநிலம், மேஹ்சானா மாவட்டத்திலுள்ள வட்நகர் என்ற இடத்தில் பிறந்தார். 

ஆர்.எஸ்.எஸ்-இன் தீவிர பற்றாளராக செயல்பட்டு வந்த இவர், பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராகவும் சேர்ந்து, ஒரே வருடத்தில் குஜராத் மாநில பொதுச்செயலாளராக உயர்ந்தார்.

பிறகு 1998ஆம் ஆண்டு குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட மோடி, விரைவில் இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் ஆகிய மாநிலங்களுக்கு பாரதிய ஜனதா கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார்.

1998ஆம் ஆண்டு அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராகப் பதவியேற்ற போது, மோடிக்கு தேசிய செயலாளர் பதவி வழங்கப்பட்டது. 2001ஆம் ஆண்டு குஜராத் மாநில முதல்வராக பதவியேற்றார். பிறகு 2014ஆம் ஆண்டு இந்திய பிரதமராக பதவியேற்றார். மீண்டும் 2019ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக இந்திய பிரதமராக பதவியேற்றுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian prime minister Narendra Modi history


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->