இந்தியாவில் இந்தி பேச முடியாவிட்டால் நாட்டை விட்டு வெளியேறுங்கள்..உ.பி பாஜக அமைச்சர்.! - Seithipunal
Seithipunal


சமீபத்தில் நாடு முழுவதும் இந்தி மொழி எதிர்ப்பு குறித்து விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இதில், பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் இந்திதான் இந்தியாவின் தேசிய மொழி என்று தெரிவித்திருந்தார். இதற்கு கன்னட நடிகர் கிச்சா சுதீப் இந்தி மற்ற மொழிகளைப் போல இந்தியாவின் ஒரு மொழி தான் என கூறினார். 

அஜய் தேவ்கனின் இந்த கருத்துக்கு திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விவகாரம் சர்ச்சையாகி நிலையில் பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்திக்கு ஆதரவாக உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாஜக அமைச்சர் சஞ்சய் நிஷாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் "நீங்கள் இந்தியாவில் வசிக்கிறீர்கள் என்றால் இந்தியை நேசிக்க வேண்டும். இல்லையெனில் நீங்கள் வெளி நாட்டவராக கருதப்படுவீர்கள். ஹிந்தி பேச முடியாவிட்டால் நாட்டை விட்டு வெளியேறி வேறு எங்கேயாவது செல்லுங்கள்" என தெரிவித்துள்ளார். தற்போது இவரது இந்த கருத்துக்கு பலரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

If you can not speak Hindi in India, leave the country UP BJP Minister


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->