மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத்தலைவிக்கு ஜாக்பாட்! முன்னாள் அமைச்சர் அதிரடி அறிவிப்பு !! - Seithipunal
Seithipunal


அதிமுக ஆட்சிக்கு வந்து எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானால் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதியளித்துள்ளார்.

2021 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப பெண்களுக்கும் மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி பெண்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் பெண்களும் திமுகவிற்கு வாக்களித்து ஆட்சி கட்டிலில் அமர்த்தினர். 
ஆனால், இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி திமுக அரசு காலம் தாழ்த்தி வந்தது. ஒரு வழியாக ,  இரண்டரை ஆண்டுகள் கழித்து 2023 செப்டம்பர் முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டது. 

ஆனால் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதை மாற்றி தகுதி வாய்ந்த பெண்களுக்கு மட்டும் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது மகளிர் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. தொடக்கத்தில்  ஒரு கோடி பெண்களுக்கு வழங்கப்படும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு செயல்படுத்தினாலும் தொடர்ந்து பயனாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு தற்போது ஒரு கோடியே 15 லட்சத்து 16 ஆயிரத்து 292 பேர் இணைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்,   சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி தொண்டாமுத்தூர் தொகுதியில்,  கோவை புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சாரம்நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசுகையில்,தேர்தல் வாக்குறுதியில் திமுக கூறியபடி 1௦௦௦ ரூபாய் மகளிர் உரிமைத் தொகை அனைத்து பெண்களுக்கும் கொடுக்கப்படவில்லை. 

மீண்டும்  எடப்பாடியார் ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து குடும்ப தலைவிக்கும் 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என்று உறுதி அளித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

If AIADMK comes to power again Jackpot for housewives! Ex-Minister Action Announcement !!


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->