வீட்டிற்காகவும், நாட்டிற்காகவும் உழைக்கும் மகளிர் தம் வாழ்வில் பாதுகாப்பாக, குடும்பத்தோடு மகிழ்வுடன் வாழ ஜி கே வாசன் வாழ்த்து.!! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் மார்ச் 8 ஆம் நாள் சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடப்படுவதன் மூலம் மகளிர் நலன் காக்கப்பட வேண்டும். மகளிருக்கான கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பு, சம ஊதியம், பாதுகாப்பு ஆகியவற்றில் மத்திய மாநில அரசும், தனியாரும் தங்களுக்குள்ள கடமையை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், சமுதாயத்தில் ஒரு குடும்பம் முன்னேறவும், அந்த குடும்பத்தால் ஊர் முன்னேறவும், அதன் மூலம் மாநிலம் வளர்ச்சி அடையவும், நாடு வளம் பெறவும் மகளிர் ஆற்றும் பணிகள் அளவிடற்கரியது. மனித சமுதாயத்தில் சம பங்கு வகிக்கும் குடும்பத் தலைவியும், குடும்பத் தலைவனும் ஒருங்கிணைந்து குடும்பத்தை நல்வழியில் கொண்டு செல்லும்போது அக்குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் சரியாக செயல்படுவார்கள்.

பொதுவாக நாடு வளம் பெற ஒவ்வொரு குடும்ப உறுப்பினர்களின் பங்கு பெரும் பங்காக இருப்பதால் ஒவ்வொரு குடும்பத்தையும் சரியானப் பாதையில் கொண்டு செல்வதற்காக தன்னை அர்ப்பணித்துக்கொள்ளும் பெண் இனம் போற்றுதலுக்குரியது. பெண்கள் கல்வி, விளையாட்டு, அறிவியல் ஆராய்ச்சி, அரசியல் போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகிறார்கள்.

பெண் இனத்தில் குழந்தை முதல் முதியோர் வரை உள்ள அனைவரையும் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு மனிதரின் தனிப்பட்ட கடமையாகும்.
தமிழக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிகளில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு ஏற்ப வாய்ப்புகள் வழங்கப்பட்டது பாராட்டுக்குரியது. பெண்கள் நலன் காக்க த.மா.கா துணை நிற்கிறது.

மத்திய மாநில அரசுகள் பெண்களின் உரிமைக்காக, பாதுகாப்புக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது என்றாலும் கூட தொடர்ந்து பெண்கள் நலன் காக்கும் வகையில் செயல்பட வேண்டும்.

மகளிருக்கு கல்வியில், வேலை வாய்ப்பில், அரசியலில் உரிய சதவீதம் முழுமையாக கிடைப்பதற்கும், பணிப்பாதுகாப்புக்கு உத்தரவாதம் கிடைப்பதற்கும் மத்திய மாநில அரசுகள் தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

வருகின்ற பாராளுமன்றக் கூட்டத்தொடரின் இரு அவைகளிலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா அனைத்துக் கட்சிகளின் ஒருமித்த ஒத்த கருத்தோடு நிறைவேறி, பெண்கள் சமூகத்தில் அனைத்து துறைகளிலும் முன்னேற வேண்டும்.

சமூகம், அரசியல், பொருளியல் போன்ற துறைகளில் பெண்கள் அடைந்துள்ள முன்னேற்றத்தை கொண்டாடும் விதமாக சர்வதேச மகளிர் தினம் அமைந்துள்ளதால் அதை உறுதி செய்து கொள்ளும் விதமாக மகளிர் தினம் கொண்டாடப்பட வேண்டும்.

வீட்டிற்காகவும், நாட்டிற்காகவும் உழைக்கும் மகளிர் தம் வாழ்வில் பாதுகாப்பாக, நலமுடன், வளமுடன், குடும்பத்தோடு மகிழ்வுடன் வாழ இறைவன் துணை நிற்க வேண்டி த.மா.கா சார்பில் மகளிர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gk vasan wish for womens day


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->