எனக்கு இப்படி தான் ராஜ்யசபா சீட் கிடைத்தது.. பாஜகவில் இணைவது குறித்து ஜி.கே. வாசன் பேட்டி.? - Seithipunal
Seithipunal


அதிமுக சார்பில் நேற்று மூன்று ராஜ்யசபா வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டது. அதிமுகவை சேர்ந்த இரண்டு வேட்பாளர்களும், கூட்டணி கட்சிக்கு ஒரு ராஜ்யசபா எம்பி சீட்டை ஒதுக்கியுள்ளனர். அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி. முனுசாமி, முன்னாள் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளனர். 

ஜி.கே. வாசன் பாஜக தயவால் தான் எம்பி சீட்டை பெற்றதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், இது குறித்து ஆங்கில நாளிதழுக்கு ஜி.கே. வாசன் பேட்டியளித்துள்ளார். மாநிலங்களவையில் தமாகாவுக்கு  ஒரு இடம் தரவேண்டும் என்று வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அதிமுகவினரிடம் சொல்லி கொண்டிருந்தோம். 

மாநிலங்களவைகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், மீண்டும் அதிமுகவிடம் கோரிக்கை வைத்தும். ஆனால் நாங்கள் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. எங்களது கோரிக்கையை ஏற்று அதிமுக மாநிலங்களவை எம்பி பதவியை ஒதுக்கி உள்ளது. இதற்காக மகிழ்ச்சியும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன். 

நான் மாநிலங்களவை எம்பி பதவியை பெறுவதற்கு டெல்லியில் உள்ள பாஜக உதவி செய்ததாக சிலர் கூறுகிறார்கள். அது உண்மையில்லை. தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை எம்பிகளை தேர்வு செய்ய அதிமுக எம்எல்ஏக்கள் தான் வாக்களிக்க வேண்டும். கூட்டணியில் உள்ள வேறு எந்த கட்சிக்கும் ஒரு எம்எல்ஏ கூட கிடையாது. பாஜகவுக்கும் ஒரு எம்எல்ஏ கூட கிடையாது. அப்படி இருக்கும்போது பாஜகவால் நான் எப்படி மாநிலங்களவை எம்பி பதவியை பரிந்துரைக்கப்பட்டு இருப்பேன் என கூறினார். 

நான் கட்சி மாறி விடுவேன் என்று கூட வதந்தி பரப்புகிறார்கள். இத்தகைய வதந்திகளில் எந்த உண்மையும் கிடையாது. தமிழகத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை நன்றாக வளர்ந்து வருகிறது. உள்ளாட்சி அமைப்புகளில் எங்களுக்கு பிரதிநிதித்துவம் கிடைத்து உள்ளது எனவே தனித்தன்மையுடன் இயங்க விரும்புகிறது. 

நான் பாஜகவில் சேர்ந்து விடுவேன் என்ற வதந்தியை பரப்புகிறார்கள். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வளர்ந்து விடக்கூடாது என்பதற்காக இத்தகைய வதந்திகளை பரப்பு வருகிறார்கள். அவர்கள் பகல் கனவு பலிக்காது எனக் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gk vasan says about mp seat reason


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->