"மோடியா இல்ல இந்த லேடியா".. மனைவியை அரசியலில் இழுக்காதீங்க.. அண்ணாமலைக்கு காயத்ரி அட்வைஸ்..!! - Seithipunal
Seithipunal


தமிழக பாஜகவில் இருந்து பல நிர்வாகிகள் தொடர்ந்து அதிமுகவில் இணைந்து வருகின்றனர். இதன் காரணமாக அதிமுக பாஜக இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. 

மதுரையில் செய்தியாளர்கள் சந்தித்த அண்ணாமலை நானும் ஒரு அரசியல் கட்சி தலைவன் தான் ஜெயலலிதா போல் கருணாநிதி போல் நானும் சில முடிவுகளை எடுக்க நேரிடும் என பேசி இருந்தார்.

இதற்கு அதிமுக தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அம்மையார் ஜெயலலிதா உடன் ஒப்பிடும் தலைவர் இந்தியாவில் இன்னும் பிறக்கவில்லை, பிறக்கப் போவதுமில்லை என அண்ணாமலையின் பேச்சுக்கு பதில் அளித்து தந்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து கோவையில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நான் ஒரு ஒப்பீட்டுக்காக அவர்கள் ஒரு அரசியல் கட்சி தலைவராக இருந்தார்கள் என்று கோணத்தில் பேசினேன். 

அமையார் ஜெயலலிதாவை விட 100 மடங்கு சிறந்தவர் என்னுடைய தாயார். ஜெயலலிதாவை விட 1000 மடங்கு சிறந்தவர் என்னுடைய மனைவி" என பேசி மீண்டும் சர்ச்சையை கிளப்பினார்.

இதற்கு அதிமுக தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதே வேளையில் சமீபத்தில் பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட காயத்ரி ரகுராம் அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் "அண்ணாமலை உங்கள் மனைவி ஜேஜே அம்மாவை விட ஆயிரம் மடங்கு வலிமையானவராக இருந்தால் "மோடியா இல்லை இந்த லேடியா" என்று வெளிப்படையாக சவால் விடுங்கள். பொது வாழ்க்கைக்கு வந்து எங்களின் சவால்களை எதிர்கொள்ளும்படி உங்கள் மனைவியிடம் கேளுங்கள்.

அண்ணாமலை நீங்கள் பாதையில் இருந்து தப்பிக்க வேண்டும் என்று உங்கள் மனைவியையும் அம்மாவையும் தேவையற்ற அரசியல் கருத்துகளுக்கு இழுத்து விடுகிறீர்கள். அண்ணாமலை முதலில் ஜேஜே அம்மாவை பெயரை சொல்லி அழைப்பதை நிறுத்த வேண்டும். பலமான எதிர்க்கட்சிகள் கூட அவரை அம்மையார் என்று மரியாதை அளிக்கின்றனர்" என பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gayathri Raghuram responds to Annamalai interview on Jayalalithaa


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->