காவிரி விவகாரம் || ஐவர் குழுவை அமைத்து ஆய்வு செய்யுங்க! முன்னாள் பிரதமர் யோசனை! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கிடையான காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் இரு நபர் கொண்ட அமர்வு காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய அதிகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை.

அவர்கள் பிறப்பிக்கும் உத்தரவு மற்றும் எடுக்கும் முடிவுகளுக்கு இரு மாநிலங்களும் கட்டுப்பட வேண்டும் என உத்தரவிட்டு வழக்கினை தள்ளுபடி செய்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவின் மூலம் தமிழ்நாடு மற்றும் கர்நாடக அரசுகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

மேலும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழு தமிழ்நாட்டிற்கு கர்நாடக அணையிலிருந்து அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 5000 கன அடி வீதம் நீர் திறக்க வேண்டும் என்பதை உறுதி செய்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்கள் செய்த தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தமிழகத்திற்கு தேவையான நீரை கர்நாடகா வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்த தீர்ப்பை கர்நாடக அரசு முறையாக அமல்படுத்த வேண்டும். தவறினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்கொள்ள நேரிடும். சட்டரீதியில் சென்று கொண்டிருக்கும்போது பேச்சுவார்த்தை நடத்துவது சரியாக இருக்காது. 

காவிரி மேலாண்மை ஆணையம் வினாடிக்கு 5000 கன அடி நீர் வீதம் அடுத்த 15 நாட்களுக்கு திறக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அதேபோன்று கர்நாடக அணையில் இருக்கும் நீரில் தமிழகத்திற்கு சேர வேண்டிய பங்கினை வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது" என தெரிவித்தார்.

இந்த நிலையில் முன்னாள் பிரதமரும் மதசார்பற்ற ஜனதா பல கட்சியின் மூத்த தலைவருமான தேவகவுடா "காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவை சேராத ஐவர் குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும். அவர்கள் இரு மாநிலங்களிலும் உள்ள பயிர்களின் நிலை, நீர் இருப்பு பற்றி ஆய்வு செய்து அவர்கள் அளிக்கும் அறிக்கையை வைத்து முடிவெடுக்க வேண்டும். இந்த கருத்துக்கு அரசு ஒப்புக் கொள்ளவில்லை" என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Former PM DevaGowda idea to set up a five member committee for CauveryIssue


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->