அனைவருக்கும் சொந்தமானவர் ராமர்.!! - "பரூக் அப்துல்லா" அடித்த அந்தர்பல்டி.!! - Seithipunal
Seithipunal


சமீபத்தில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டு கட்சித் தலைவருமான பரூக் அப்துல்லா இந்திய பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருதரப்பு உறவில் சுமூக தீர்வு காணவேண்டும். இல்லாவிட்டால் காசா நிலைதான் உருவாகும் என பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் கடவுள் ராமர் இந்துக்களுக்கு மட்டும் சொந்தமானவர் அல்ல; அவர் இந்த உலகில் உள்ளஅனைவருக்கும் சொந்தமானவர் என தெரிவித்துள்ளார்.நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் "அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட உள்ளது. இந்தக் கோயில் உருவாவதற்காக முயற்சி மேற்கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

கடவுள் ராமர் இந்துக்களுக்கு மட்டும் சொந்தமானவர் அல்ல என்பதை நாட்டு மக்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.இந்த உலகில் உள்ள அனைவருக்கும் சொந்தமானவர் ராமர். உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவருக்கும் கடவுள் ராமர் என நூல்களில் எழுதப்பட்டுள்ளது. சகோதரத்துவம், அன்பு, ஒற்றுமை மற்றும் ஒருவருக்கொருவர் உதவுவது உள்ளிட்டவை குறித்து ராமர் எடுத்துரைத்துள்ளார். ராமர் கோயில் திறக்கப்பட உள்ள நிலையில், நம் நாட்டில் குறைந்து வரும் சகோதரத்துவத்தை மீட்டெடுக்க நாம் அனைவரும் முயற்சி செய்ய வேண்டும்" என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

farooq abdullah said god ram belongs to everyone in the world


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->