"34 ஆண்டுகளுக்குப் பிறகு எம்எல்ஏ".. பதவி ஏற்றார் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்..!! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா மரணமடைந்த நிலையில் அத்தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் முடிவு வெளியானது. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் 66,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 

இந்த நிலையில் இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு முன்னிலையில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் சட்டமன்ற உறுப்பினராக உறுதிமொழி ஏற்றுக் கொண்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள பேரவை வளாகத்தில் சபாநாயகர் அறையில் இளங்கோவனுக்கு சபாநாயகர் அப்பாவு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த நிகழ்வில் முதல்வர் மு.க ஸ்டாலின், கூட்டணி கட்சித் தலைவர்களான காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி, விசிக தலைவர் திருமாவளவன், சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் மற்றும் ஜவாஹிருல்லா ஆகியோர் பங்கேற்றனர்.

தற்பொழுது தமிழ்நாடு சட்டப்பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர்களின் எண்ணிக்கை 18 ஆக நீடிக்கிறது. 34 ஆண்டுகளுக்குப் பிறகு எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இன்று பதவி ஏற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EVKS Elangovan accepted the position office as MLA


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->