ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. ஓபிஎஸ் எடுத்த அதிரடி முடிவு.! - Seithipunal
Seithipunal


வரும் ஜனவரி 23ம் தேதி னது ஆதரவு மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக, ஓ பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அண்மையில் கடந்த வருடம், டிசம்பர் மாதம் 21ஆம் தேதி தான் ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவு மாவட்ட செயலாளர் ஆலோசனைக் கூட்டம், சென்னை வேப்பேரியில் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் சுமார் 88 மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். தலைமை கழக நிர்வாகிகள் சுமார் 500 பேர் கலந்து கொண்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஓ பன்னீர்செல்வம் தனது ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை மீண்டும் கூட்ட உள்ளார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவுகளை ஓபிஎஸ் எடுக்க உள்ளதாக அவரின் ஆதரவாளர்கள் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

மேலும் கட்சியை பலப்படுத்துவது குறித்தும் ஓ பன்னீர்செல்வம் இந்த ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

அதே சமயத்தில் இந்த ஆலோசனை கூட்டத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்படலாம் என்ற பரபரப்பு தகவலும் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Erode by election OPS discuss with district admins


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->