தேர்தல் களத்தில் இறங்கும் ஈபிஎஸ்... இன்று மாலை 5 மணி முதல் சூறாவளி பிரச்சாரம்..!! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக கே.எஸ் தென்னரசு போட்டியிடுகிறார். அதிமுக வேட்பாளரை ஆதரித்து அதன் கூட்டணிக் கட்சி தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

அதிமுக கூட்டணியின் முக்கிய கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் திறந்த வெளி வாகனத்தில் நின்றபடி கே.எஸ் தென்னரசுக்காக வாக்கு சேகரித்தார்.

இந்த நிலையில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

அதன்படி பிப்ரவரி 15, 16, 17 மற்றும் 24, 25 ஆகிய தேதிகளில் ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

அந்த வகையில் இன்று தனது தேர்தல் பிரச்சாரத்தின் முதல் பயணத்தை எடப்பாடி பழனிச்சாமி தொடங்க உள்ளார். அதன்படி இன்று மாலை 5 மணிக்கு ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட வீரப்பம்பாளையம் பகுதியில் தனது பிரச்சாரத்தை தொடங்கும் இபிஎஸ் வெட்டுக்காடு வலசு, நாராயணவலசு, டவர் லைன் காலனி, ஆட்சியர் அலுவலகம், சம்பத் நகர் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிக்கிறார்.

அதனைத் தொடர்ந்து பெரிய வலசு நால் ரோடு, கல்யாண விநாயகர் கோவில், பன்னீர்செல்வம் பார்க் வீரப்பன்சத்திரம் ஆகிய பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் நின்று பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் பிரச்சாரம் மேற்கொள்ளதால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EPS starts campaign from 5 pm today in erode east field


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->