புதுச்சேரியில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்: எப்போது தெரியுமா? - Seithipunal
Seithipunal


அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வருகின்ற 30ஆம் தேதி புதுச்சேரியில் தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளார். இது குறித்து மாநில அ.தி.மு.க செயலர் தெரிவித்திருப்பதாவது, 

புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தமிழ் வேந்தனை ஆதரித்து வருகின்ற 30ஆம் தேதி மாலை 4 மணி அளவில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி புதிய துறைமுகவளாக பகுதியில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்று பேச உள்ளார். 

பிறகு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் புதுச்சேரி மாநிலம் முழுவதும் அ.தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் பிரசாரம் தொடங்கப்படும். 

புதுச்சேரியில் பா.ஜ.க வேட்பாளராக போட்டியிடும் நமச்சிவாயம் அமைச்சர் பதவியில் இருந்த படி தேர்தலை சந்திப்பது சரியானது இல்லை. 

இந்த பிரச்சனை தொடர்பாக அ.தி.மு.க தலைமையிடம் அனுமதி பெற்று இந்திய தேர்தல் ஆணையருக்கு புகார் அளித்துள்ளோம். 

வேற்றுமனுதாக்களின் போது பா.ஜ.கவினர் தேர்தல் விதியை கடைபிடிக்கவில்லை. நோயாளியுடன் வந்த அவசர சிகிச்சை வாகனத்தை கூட அனுமதிக்காமல் பாஜகவினர் சாலை மறித்து நின்றனர். 

அதனை போலீசார் வேடிக்கை பார்த்தனர். இங்கு அமைச்சராக இருந்து கொண்டே வேட்பாளராக போட்டியிடுவதால் நேர்மையாக தேர்தல் நடக்காது என்ற நிலை ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Edappadi Palaniswami campaign in Puducherry


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->