#திருக்கடையூர் : 70 வயதை எட்டிய ஸ்டாலின்.. பீமரத சாந்தி யாகத்துடன் சிறப்பு பூஜையில் துர்கா ஸ்டாலின்.!  - Seithipunal
Seithipunal


மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி அருகே திருக்கடையூர் பகுதியில் அபிராமி சமேத அமிர்த கணேஷ்வரர் கோவில் இருக்கின்றது. இந்த கோவிலில் அன்றாடம் ஏராளமான பக்தர்கள் வந்து யாகங்கள் செய்து சாமி தரிசனம் செய்து வருவார்கள். 

இந்நிலையில் இன்று இந்த கோவிலுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் வந்துள்ளார். மத்திய ஒன்றிய திமுக செயலாளர் அமிர்த விஜயகுமார் அவரை வரவேற்றார். அதன் பின் கோவில் முக்கிய பிரதிநிதிகள் மாலை மரியாதையை செய்து அவரை வரவேற்றார்கள். 

கோவிலுக்குள் சென்ற துர்கா ஸ்டாலின் கோ பூஜை, கஜ பூஜை, அஸ்வ பூஜை உள்ளிட்டவற்றை மேற்கொண்டார். ஸ்டாலினுக்கு தற்போது 70 வயது முடிந்துள்ள நிலையில்  நூற்றுக்கால் மண்டபத்தில் பீமரத சாந்தி யாகத்தை நடத்தி இருக்கின்றார். இந்த யாகத்தை காண நிறைய பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வந்ததால் காவல்துறையினர் எந்த இடையூறும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

அதன் பின் யாகத்தை முடித்துவிட்டு சாமி தரிசனம் செய்த துர்கா ஸ்டாலின் பின்னர் மேல பெரும் பள்ளத்தில் இருக்கும் அவர்களின் குலதெய்வ கோவிலுக்கு சென்று அங்காள பரமேஸ்வரி அம்மனை யாகங்கள் நடத்தி சிறப்பு வழிபாடு செய்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Durga Stalin peemaradhayagam In Thirukkadaiyur


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->