மணியம்மை மீதான சர்ச்சை பேச்சு! திருந்தினேன்; வருந்தினேன்! அமைச்சர் துரைமுருகன் அறிக்கை! - Seithipunal
Seithipunal


வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரிகள் கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி திமுகவின் முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் அமைச்சர் பெருமக்கள் பலர் கலந்து கொண்டனர். 

இந்த விழாவில் பேசிய திமுக பொதுச்செயலாளரும் நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் திராவிட கழகத்தின் தலைவர் பெரியார் தனது மனைவி மணியம்மையை கட்சிப் பணிக்காக கூட்டிக் கொண்டு போனார் என பேசி இருந்தார்.

அமைச்சர் துரைமுருகனின் இந்த பேச்சால் திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி வருத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் இது குறித்து வருத்தம் தெரிவித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

அந்த அறிக்கையில் "வேலூர் பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் மணியம்மை திருமணம் குறித்து பேசும்போது பயன்படுத்திய வார்த்தை திராவிடர் கழக தலைவருக்கு வீரமணி மற்றும் பெரியார் பற்றாளர் தந்திருப்பதாக அறிகிறேன்.

கட்சி பணிக்காக மணியம்மையை பெரியார் அழைத்துச் சென்றார் என்பதற்கு பதிலாக கூட்டி போனார் என்று பேசி விட்டேன். இரு வார்த்தைகளுக்கும் மலைத்த வேறுபாடு இருப்பதை நான் உணர்கிறேன்.

நான் பயன்படுத்திய தேவையற்ற வார்த்தைகள் வருத்தத்தை தந்திருந்தால் அதற்கு வருந்துகிறேன். தந்தை பெரியார் இடத்தில் நான் எவ்வளவு கொள்கை பிடிப்புக் கொண்டுள்ளேன் என்பது திராவிட கழகத் தலைவர் வீரமணி நன்கு அறிவார்" என அந்த அறிக்கையில் வருத்தம் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Duraimurugan expressed regretted controversy over Maniammai


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->