தமிழ்நாட்டில் இது நடக்காது.. மரு.ராமதாசு பரபரப்பு ட்விட்.!!
Drramadoss tweet about caste wise census in TN
இந்தியா முழுவதும் சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த முடியாது என மத்திய பாஜக அரசு ஏற்கனவே நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ள நிலையில் பல்வேறு மாநிலங்கள் சாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி வருகின்றன.
முன்னதாக பீகாரை ஆளும் நிதிஷ் குமார் தலைமையிலான அரசு சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி முடித்து அமல்படுத்தியுள்ள நிலையில் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் சாதிவாரிய கணக்கெடுப்பு பணியை துவங்கியுள்ள நிலையில் ஜார்க்கண்ட் அரசும் சாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை துவங்கியுள்ளது.
இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் "அங்கு நடக்கிறது.. இங்கு நடக்காதா? ஜார்கண்டிலும் நடக்கப் போகிறது. தமிழ்நாட்டில் இப்போது நடக்காது.. சாதி வாரிய மக்கள் தொகை கணக்கெடுப்பு.." என பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வரிவூதி வரும் இத்தகைய சூழலில் மருத்துவர் ராமதாஸ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பதை குறிப்பிடத்தக்கது
English Summary
Drramadoss tweet about caste wise census in TN