எச்சரித்த மு.க.ஸ்டாலின்.. களத்தில் குதித்த பாமக.! Dr. அன்புமணி தலைமையில் அறப்போராட்டம்.! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்ட பகுதியில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே இரண்டு அணைகள் கட்டும் நடவடிக்கையை ஆந்திர அரசு கையில் எடுத்துள்ளது. ஆந்திர அரசு கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே அணை கட்டும் பட்சத்தில் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குடிநீர் வளம் கடுமையாக பாதிக்கப்படும். 

பூண்டி நீர்தேக்கத்திற்கு அந்த ஆற்றில் இருந்துதான் தண்ணீர் வந்து செல்கிறது. ஆந்திர அரசு 2 அணைகளை கட்டினால் சென்னையின் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படும். எனவே, அணை கட்டும் முடிவை அரசு கைவிட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  

அத்துடன் சமீபத்தில் இதில் தமிழக அரசை கலந்து ஆலோசிக்காமல் ஆந்திர அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள கூடாது." என்று எச்சரித்து முதல்வர் ஸ்டாலின் ஆந்திர முதல்வருக்கு கடிதம் எழுதி இருந்தார்.

இந்த நிலையில், தற்போது கொசஸ்தலை ஆற்றில் புதிய அணைகள் கட்டப்படுவதை கைவிட வலியுறுத்தி, ஆந்திர மாநில அரசைக் கண்டித்து பள்ளிப்பட்டு பகுதியில் மக்களோடு மக்களாக பாமக தலைவர் அன்புமணி மற்றும் பாமகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr anbumani ramadoss Protest in pallipattu against kosasthalai River Bridges


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->