வெடித்தது சர்ச்சை.. 2024 தேர்தலுக்கு தயாராகுங்கள்.. அரசு ஆசிரியர்களுக்கு உத்தரவு போட்ட திமுக அமைச்சர்..!! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன. இந்திய அளவில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் நோக்கில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் பல கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. அதேபோன்று அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. தேர்தலைப் பொறுத்தவரை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக நியமிக்கப்படுவது வழக்கம்.

இந்த நிலையில் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் 3வது மாநில மாநாடு உள்ளிட்ட ஐம்பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவை திமுக  அமைச்சர் தா.மோ அன்பரசன் குத்து விளக்கேற்றி தொடக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ளது.

அதற்கு இப்போதே உங்கள் பணியை தொடங்குங்கள் என அரசு ஆசிரியர்களை பார்த்து கூறியுள்ளார். திமுக கட்சித் தொண்டர்களுக்கு உத்தரவிடுவதைப் போல அரசுப் பள்ளி ஆசிரியர்களை நோக்கி திமுக அமைச்சர் தா.மோ அன்பரசன் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குச்சாவடி மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் தேர்தல் அதிகாரிகளாக அரசு ஆசிரியர்கள் செயல்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK minister told govt teachers to prepare for parliament elections


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->