சூடுபிடிக்கும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. தீவிர வாக்கு சேகரிப்பில் தேமுதிக.! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈ.வெ.ரா உயிரிழந்தை தொடர்ந்து இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் போட்டியிட பல்வேறு அரசியல் கட்சிகள் ஆர்வம் காட்டி வருகின்றன.

இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக இ வி கே எஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதேபோல் தேமுதிக மற்றும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது.

இதில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிமுக கட்சியில் இபிஎஸ் - ஓபிஎஸ் தனித்து போட்டியிடுகின்றனர். அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவினர் வேட்பாளரை நிறுத்த போவதாக அறிவித்திருந்த நிலையில் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் தரப்பும் வேட்பாளரை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில் தேமுதிக கட்சியின் வேட்பாளராக ஈரோட்டைச் சேர்ந்த ஆனந்த் போட்டியிடுகிறார். இதனையடுத்து வேட்பாளர் ஆனந்த் நேற்றிலிருந்து ஈரோடு கிழக்கு தொகுதி மக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸை தொடர்ந்து இரண்டாவது கட்சியாக தேமுதிக வாக்கு சேகரித்து வருகிறது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMDK series election campaign


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->