#BREAKING:: திடீர் திருப்பம்.. பழனிச்சாமியை சந்திக்கும் எல்.கே சுதீஷ்... அதிமுகவுக்கு தேமுதிக ஆதரவு என தகவல்..!! - Seithipunal
Seithipunal


தேமுதிக வேட்பாளர் அறிவித்துள்ள நிலையில் ஈபிஎஸ் உடன் சந்திப்பு..!!

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா மறைவை தொடர்ந்து வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. 

இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியின் சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோன்று தேமுதிக, நாம் தமிழர், அமமுக உள்ளிட்ட கட்சிகள் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்த நிலையில் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தேமுதிக வேட்பாளராக மாவட்ட செயலாளர் ஆனந்த் அறிவிக்கப்பட்ட நிலையில் திமுகவில் இணைய போவதாக சில செய்திகள் நிறுவனங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. 

இந்த நிலையில் திமுகவில் இணைய போவதாக வெளியான செய்தி உண்மை இல்லை என தேமுதிக வேட்பாளர் ஆனந்த் தெளிவுபடுத்தியிருந்தார். இதனால் தேமுதிக வேட்பாளர் தொடர்பான எழுதிய சர்ச்சை முடிவுக்கு வந்தது. 

இந்த நிலையில் தேமுதிக துணை செயலாளர் எல்.கே சுதீஷ் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று மாலை சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் இல்லத்தில் சந்திக்க தேமுதிக துணை செயலாளர் எல்.கே சுதீஷ் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சந்திப்பின் பொழுது அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு தரும் நிலைப்பாட்டை தேமுதிக எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேமுதிக வேட்பாளர் திமுகவில் இணைய போவதாக செய்திகள் வெளியான நிலையில் இன்று மாலை 4 மணிக்கு தேமுதிக துணை செயலாளர் எல்.கே சுதீஷ் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிச்சாமியை சந்திக்க உள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMDK LK Sudhish to meet AIADMK general secretary EPS


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->