I.N.D.I.A கூட்டணி பெயருக்கு புதிய சிக்கல்.!! டெல்லி நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் பாஜகவுக்கு எதிராக எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்துள்ளன. நாடு முழுவதும் சுமார் 28 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவுக்கு எதிராக கூட்டணியை அமைத்துள்ளன. எதிர்க்கட்சிகளின் முதல் ஆலோசனை கூட்டம் பாட்னாவில் நடைபெற்ற நிலையில் இரண்டாவது கூட்டம் பெங்களூருவில் கடந்த மாதம் நடைபெற்றது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற இரண்டாவது ஆலோசனைக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு INDIA - Indian National Developmental Inclusive Alliance என பெயர் சூட்டப்பட்டது. இதன் அர்த்தம் இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி என்பதாகும்.

இதனை சுருக்கி இந்தியா என எதிர் கட்சிகள் கூறி வரும் நிலையில் இந்த பெயருக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் க்ரிஷ் உபாத்தியாயா என்பவர் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் இந்தியா என்று சொல்லை கூட்டணி பெயராக பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என தெரிவித்திருந்த நிலையில் இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கும், தலைமை தேர்தல் ஆணையருக்கும் டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதேபோன்று எதிர்க்கட்சிகள் கூட்டணியில் அங்கம் வகிக்கும் 28 கட்சிகளுக்கும் விளக்கம் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. இதனால் இந்தியா என்ற பெயர் பயன்படுத்துவதில் எதிர்க்கட்சிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DelhiHC sent notice to opposition parties against India alliance name


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->