அண்ணாமலைக்கு பச்சைக்கொடி காட்டிய டெல்லி..!! தமிழக பாஜக தலைமையில் புதிய கூட்டணி..!! - Seithipunal
Seithipunal


தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக முழுவதும் பாதயாத்திரை மேற்கொள்ள உள்ளதாக அறிவித்திருந்தார். இதற்கு பாஜக தேசிய தலைமை ஆதரவாளித்துள்ளது. இந்த யாத்திரையில் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் கேரளாவை சேர்ந்த ஏராளமான பாஜக தொண்டர்கள் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

அண்ணாமலையின் இந்த பாதயாத்திரை அடுத்த ஆண்டு முழுவதும் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் அண்ணாமலை செல்ல திட்டமிட்டுள்ளார்.

மேலும் தமிழகத்தில் பாஜக தனித்து போட்டிடவே இத்தகைய முயற்சி மேற்கொள்ளப்படுவதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 "எனது பாதயாத்திரைக்கு மக்களின் ஆதரவு எப்படி உள்ளது என்பதை பொறுத்து, 2024ம் ஆண்டிற்கான நாடாளுமன்ற பொது தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட முடிவு செய்யலாம்" என டெல்லி தலைமைக்கு அண்ணாமலை தகவல் அனுப்பியுள்ளாராம். திமுகவுக்கு எதிரான அண்ணாமலையின் அரசியல் அதிரடியாக உள்ளதாக பாஜகவினர் கருதுகின்றனர்.

அதேபோன்று அதிமுகவின் உட்கட்சி பிரச்சனையில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இணைவது சந்தேகம் என்பதால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழக பாஜக தலைமையில் கூட்டணி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாகத்தான் அண்ணாமலையின் பாதையாத்திரைக்கு டெல்லி தலைமை ஒப்புக்கொண்டுள்ளது. வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டி அல்லது பாஜக தலைமையில் கூட்டணி என்ற அண்ணாமலையின் திட்டத்திற்கு பாஜக தலைமை ஆதரவு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delhi BJP gives permission to Annamalai padayatra


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->