ஈரோடு இடைத்தேர்தலில் முறைகேடு.?! சி.வி.சண்முகம் தேர்தல் ஆணையத்தில் பரபரப்பு புகார்.!  - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் உயிர் இழந்ததை தொடர்ந்து தற்போது அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்காக தமிழக அரசியல் கட்சிகள் பலவும் பரபரப்பாக இயங்கி வரும் நிலையில், வேட்பு மனு தாக்கல் நடந்து வருகிறது.

ஒவ்வொரு கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்தும் வருகின்றனர். இந்த நிலையில், அதிமுக தரப்பு முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தேர்தல் ஆணையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர் பட்டியலில் மாபெரும் மோசடி நடந்து இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். 

அத்துடன், "அதில் இறந்து போன 5000 வாக்காளர்களின் பெயர் இன்னமும் பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை. மேலும், நான்கில் ஒரு பங்கு வாக்காளர்கள் தொகுதியிலேயே இருப்பதில்லை.

இந்த தொகுதியில் இல்லாத வாக்காளர்கள் சுமார் 50,000 பேர் இருப்பார்கள். ஆகவே இடைத்தேர்தல் நேர்மையாக நடக்க வேண்டும் என்றால் வாக்காளர் பட்டியல் முறையாக சரிபார்க்கப்பட வேண்டும்." என்று தெரிவித்து இருக்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CV shanmugam complaint about By election to Election commission


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->