தொகுதி பங்கீடு: அ.தி.மு.க - தே.மு.தி.க. இடையே இன்று மாலை பேச்சுவார்த்தை! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. 

இந்த தேர்தலில் அ.தி.மு.க வலுவான கூட்டணி கட்சிகளை அமைக்க முடிவு செய்து உள்ளது. மேலும் தே.மு.தி.க போன்ற சில கட்சிகள் அ.தி.முக.வுடன் கூட்டணி தொடர உறுதி செய்தது. 

இதனால் அதிமுக முன்னாள் அமைச்சர்களான வேலுமணி, தங்கமணி, அன்பழகன் ஆகியோர் விஜயகாந்தின் வீட்டிற்கு சென்று தே.மு.தி.க பொதுசெயலாளர் பிரேமலதாவை நேரில் சந்தித்து பேசினார். 

அப்போது நடந்த முதல் கட்ட பேச்சுவார்த்தையில் தேமுதிக 7 பாராளுமன்ற தொகுதி மற்றும் ஒரு மேல் சபை எம்.பி பதவியை ஒதுக்க வேண்டும் என கேட்டுள்ளது. 

இது தொடர்பாக மீண்டும் பேசிக் கொள்ளலாம் என அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மாலை அ.தி.மு.க-தே.மு.தி.க இடையே இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. 

இந்த பேச்சு வார்த்தையின் இறுதியில் தேமுதிக போட்டியிடும் தொகுதிகள் முடிவாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Constituency Division ADMK DMDK talks issue


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->