ராகுல் காந்தியை பார்த்தால் பாஜகவுக்கு பயம்.. மக்கள் திசை திருப்பும் முயற்சி..காங்கிரஸ் பதிலடி..!! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை ராஜஸ்தானை தொடர்ந்து இன்று அரியானா மாநிலத்திற்குள் நுழைந்துள்ளது. இந்த நிலையில் உலகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள மத்திய அரசு நேற்று அறிவுறுத்தி இருந்தது. அதேபோன்று காங்கிரஸ் கட்சியின் ஒற்றுமை யாத்திரையில் உள்ள ராகுல் காந்திக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூர் மான்வியா இன்று கடிதம் எழுதியுள்ளார். 

அந்த கடிதத்தில் "பாரத் ஜோடோ யாத்திரையில் முக கவசம் அணிதல் உள்ளிட்ட கோவிட் நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். கொரோனா தடுப்பூசி போட்டவர்களை மட்டுமே யாத்திரையில் அனுமதிக்க வேண்டும். கொரோனா நடைமுறைகளை பின்பற்ற முடியாவிட்டால் தேச நலனை கருதி நடை பயணத்தை ஒத்தி வைக்க வேண்டும்" என அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ள இருந்தார்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சரின் இந்த கடிதத்திற்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் பல்வேறு கேள்விகளையும் விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி "குஜராத் தேர்தலின் போது பிரதமர் மோடி கோவிட் நெறிமுறைகளை பின்பற்றினாரா என்று பாஜகவிடம் கேட்க விரும்புகிறேன். ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரையை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் விரும்பவில்லை. இந்த யாத்திரையில் மக்கள் விரும்பு இணைகின்றனர் என நினைக்கிறேன். மக்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சியில் பாஜக ஈடுபட வேண்டாம்" என தெரிவித்துள்ளார்.

அதேபோன்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் "திரிபுராவில் பிரதமர் நடத்திய பேரணியில் கொரோனா நடைமுறைகள் பின்பற்றவில்லை. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஏன் பிரதமருக்கு கடிதம் எழுதவில்லை? இதற்கு காரணம் ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரைக்கு மக்கள் ஆதரவு பெருகுவதை கண்டு பாஜக பயந்துவிட்டது. ஒற்றுமை யாத்திரையை சீர்குலைக்கவே மத்திய அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்" என்று குற்றம் சாட்டியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress react BJP minister letter to postpone the Yatra


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->