காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல்.. நாளை இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு.!  - Seithipunal
Seithipunal


வரும் அக்டோபர் 17ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு தேர்தல் நடக்கவுள்ளது. இதில் சோனியா காந்தி குடும்பத்தினர் யாரும் போட்டியிடவில்லை. 

இந்த தலைவர் பதவிக்கு மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கே.என்.திரிபாதி, சசிதரூர் உள்ளிட்டோர் வேட்பாளர் தாக்கல் செய்துள்ளனர். ஏற்கனவே ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் லேட் போட்டியிடப்படுவதாக கூறப்பட்டது. 

அவர் போட்டியிடவில்லை என்று தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, மாநிலங்களவை எம்பி விஜய சிங் போட்டியிடப் போவதாக அறிவித்திருந்தார். ஆனால், தான் மல்லிகார்ஜுனன் கார்கேவுக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் இதனால் போட்டியிடவில்லை என்றும் தெரிவித்து இருந்தார். 

இதனை தொடர்ந்து நாளை காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று தேர்தல் ஆணைய தலைவர் மதுசூதன் மிஸ்திரி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

congress leader election candidates list tomorrow


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->