காங்கிரஸ் ஆட்சியில் கடவுளை வணங்குவது கூட குற்றம்தான்..பிரதமர் மோடி சாடல்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கடந்த ஏப்ரல் 19ம் தேதி மக்களவைத்  தேர்தலுக்கான முதற்கட்ட வாக்கு பதிவு நடைபெற்று முடிந்தது. 2ம் கட்ட வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 26ம் தேதி நடைபெற உள்ள நிலையில் , அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், ராஜஸ்தான் மாநிலம் மாதோபூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் பிரதமர் நரேந்திர மோடி.

அப்போது கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால் நாட்டில் குண்டு வெடிப்புகள் நடந்திருக்கும். காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால் காஷ்மீரில் ராணுவ வீரர்கள் மீது கற்கள் வீசப்பட்டு இருக்கும். காங்கிரஸ் ஆட்சியின் போது பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ராஜஸ்தான் முதலிடத்தில் இருந்தது.

மத அடிப்படையில் இட ஒதுக்கிடை நீட்டிக்க காங்கிரஸ் விரும்புகிறது. ஆந்திராவில் எஸ்.சி,எஸ்.டி இட ஒதுக்கீட்டை குறைத்து இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு கொண்டுவர காங்கிரஸ் முயன்றது. காங்கிரஸ் ஆட்சியில் கடவுள் மந்திரங்களை சொல்வது கூட குற்றம் ஆகிவிடும். நான் அரசியலமைப்பு சட்டத்தை நன்றாக புரிந்து கொண்டுள்ளேன். நான் அம்பேத்கரை வணங்குகிறேன் என்று பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress government worst Pm Modi speech


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->