காங்கிரஸ்+ஆம் ஆத்மி உடன்பாடு.. 5 மாநிலங்களுக்கு குறி.. இண்டி கூட்டணியில் முன்னேற்றம்.!! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு எதிராக ௨௧ எதிர் கட்சிகள் ஓரணியில் திரண்டு இண்டி கூட்டணியை உருவாக்கியுள்ளன. இந்தக்கூட்டணி சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் டெல்லி பஞ்சாப், அரியானா, குஜராத் ஆகிய மாநிலங்களில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் இடையே நடைபெற்ற தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகள், மாநிலங்களில் தங்களுக்கு உள்ள செல்வாக்கு அடிப்படையில் தொகுதி உடன்பாடு செய்து கொள்வது பற்றி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.


அதன்படி காங்கிரஸ் கட்சியின் தேசிய கூட்டணி ஒருங்கிணைப்பாளர் முகுல் வாஸ்னிக், ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட், காங்கிரஸ் தலைவர்கள் சல்மான் குர்ஷித், மோகன் பிரகாஷ், டெல்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி, ஆம் ஆத்மி தலைவர்கள் சந்தீப் பதக் மற்றும் டெல்லி அமைச்சர்கள் அதிஷி சௌரவ், பரத்வாஜ் ஆகியோர் தொகுதி உடன்பாடு குறித்து ஆலோசனை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் தலைநகர் டெல்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளில் 3 தொகுதிகளையும், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 13 தொகுதிகளில் கடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற 6 தொகுதிகளையும் காங்கிரசுக்கு ஒதுக்க ஆம் ஆத்மி கட்சி ஒப்புக்கொண்டுள்ளது.


அதேபோல் ஹரியானாவில் 3 தொகுதிகளையும், குஜராத்தில் 1 தொகுதியையும், கோவா மாநிலத்தில் 1 தொகுதியையும் பெற்றுக்கொள்ள ஆம் ஆத்மி சம்மதம் தெரிவித்ததாகவும் முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. கிழக்கு டெல்லி, வடக்கு வடகிழக்கு டெல்லி மற்றும் சாந்தினி சவுக் ஆகிய மூன்று தொகுதிகளில் போட்டியிட காங்கிரஸ் ஆர்வம் காட்டியுள்ளது. காங்கிரஸ் மட்டும் ஆம் ஆத்மி இடையே தொகுதி பங்கீடு முடிவடைந்த பின் வியூகம் அமைத்து தேர்தலை சந்திக்க கூட்டாக "வார் ரூம்"அமைத்து ஒருங்கிணைந்து செயல்பட ஒப்புக் கொள்ளப்பட்டதாகவும் தெரிகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress Aam Aadmi Party agree on parliamentary elections


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->