#ஈரோடுகிழக்கு:: தொழிலாளிகள் முதல் தொழிலதிபர்கள் வரை பழகக்கூடிய அதிமுக வேட்பாளரின் முழு விவரம் இதோ..!! - Seithipunal
Seithipunal


பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான  அதிமுக வேட்பாளராக கே.எஸ்.தென்னரசு அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கே.எஸ்.தென்னரசுவை வேட்பாளராக அறிவித்துள்ளார்.

கே.எஸ் தென்னரசு ஈரோடு கருங்கல்பாளையம் சொக்காய்தோட்டம் பகுதியை சேர்ந்த இவருக்கு வயது 65. இவர் அந்த தொகுதியில் கூலித் தொழிலாளி முதல் பெரும் தொழிலதிபர்கள் வரை அனைவரிடமும் நன்றாக பழகக் கூடியவர்.

முதன் முதலில் 1988-ம் ஆண்டு ஈரோடு நகர அ.தி.மு.க. செயலாளராக இருந்தவர். பின்னர் 1992-ம் ஆண்டு ஈரோடு நகர இணை செயலாளர்,1995-ம் ஆண்டு ஈரோடு நகர செயலாளர், 1999-ம் ஆண்டு கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ஆகிய பதவிகளை வகித்தார்.

பின்னர் 2000-ம் ஆண்டு மீண்டும் ஈரோடு நகர அதிமுக செயலாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் 2010-ம் ஆண்டு ஈரோடு மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற தலைவராக இருந்த இவர் 2011-ம் ஆண்டு முதல் தற்பொழுது வரை ஈரோடு கிழக்கு தொகுதி எம்ஜிஆர் மன்ற செயலாளர் பொறுப்பு வகித்து வருகிறார்.

இவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த பொழுது 2001 மற்றும் 2016ம் ஆண்டுகளில் ஈரோடு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் சொந்தமாக ஸ்கிரீன் பிரிண்டிங் பட்டறை வைத்து நடத்தி வருகிறார்.

கடந்த 25 ஆண்டுகளாக ஈரோடு மாவட்ட சுமைதூக்குவோர் மத்திய சங்க பொதுச் செயலாளராகவும் இருந்து வருகிறார். இதன் காரணமாக அடித்தட்டு மக்களிடம் நேரடியாக பழகக்கூடிய நபராக அதிமுக வேட்பாளர் கே.எஸ் தென்னரசு விளங்குகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Complete info about Erode East AIADMK candidate KS Thenarasu


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->