செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு - உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு என்னவாக இருக்கும்? - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்தாண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இதையடுத்து, செந்தில் பாலாஜி பலமுறை ஜாமீன் கோரி மனுக்கள் தாக்கல் செய்தார். 

ஆனால், அந்த மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த வழக்குகளில் அமலாக்கத்துறை சார்பில் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், செந்தில் பாலாஜிக்கு இதுவரை ஜாமீன் கிடைக்கவில்லை.

இதற்கிடையே, செந்தில் பாலாஜி திடீரென தனது பதவியையும் ராஜினாமா செய்தார். இந்த நிலையில், செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த ஜாமீன் மனு நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 

இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட நீதிபதி இந்த வழக்கின் தீர்ப்பை (பிப்ரவரி 15) ஆம் தேதியான இன்று வழக்குவதாக தெரிவித்தார். அதன் படி செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai high court today judgment senthil balaji bail case


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->