சந்திரபாபு நாயுடு உருவ பொம்மை எரிப்பு... காவல் நிலையம் முற்றுகை... ஆந்திராவில் வெடித்த போராட்டம்.! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலத்தில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியினர் மற்றும் தெலுங்கு தேச கட்சியினர் மாறி மாறி போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் ஆந்திராவின் முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷ் குப்பம் பகுதியில் இருந்து இச்சாபுரம் வரை பாதயாத்திரை மேற்கொண்டார்.

அப்போது அவர் எஸ்.சி/ எஸ்.டி பிரிவினரை தரக்குறைவாக பேசியதாக கூறி ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக அவர்கள் சந்திரபாபு நாயுடுவின் உருவ பொம்மையையும் எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கு கண்டனம் தெரிவித்த தெலுங்கு தேசம் கட்சியினர் பேரணியாக சென்றபோது காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தியதால் இருதரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சந்திரபாபு நாயுடுவின் உருவ பொம்மையை எரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி குப்பம் காவல் நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் தெலுங்கு தேசம் கட்சியினர். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

burning effigies police station siege tension arose in andhra pradesh


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->