நாட்டுக்கு எதுக்கு ஆளுநர்.? - ப்ளூசட்டை மாறனின் தடாலடி பேச்சால்.. வெடித்த சர்ச்சை.!  - Seithipunal
Seithipunal


தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கம் வாரிசு படத்தில் விஜய் நேரடியாக தெலுங்கில் நடித்துள்ளார். இதில், அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகியுள்ளது.

இதில் சரத்குமார், ஷியாம், பிரகாஷ்ராஜ், குஷ்பூ, யோகி பாபு மற்றும் கணேஷ் வெங்கட்ராம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். 

பொங்கல் தினத்தை முன்னிட்டு வாரிசு படம் இன்று ரிலீசாகி இருக்கின்றது. இந்த படமானது கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இத்தகைய நிலையில் இப்படத்திற்கு புளுட் சட்டை மாறன் கொடுத்துள்ள விமர்சனம் ஒன்று பெரும் சர்ச்சையாகி இருக்கிறது.

வாரிசு படத்தை பார்த்த ப்ளூ சட்டை மாறன் அவரது ரிவியூ வீடியோ வீடியோவில் இந்த படத்திற்கு எல்லாம் எதற்கு ஹீரோயின்? என்று கேட்டுள்ளார். மேலும் அவரது ஒப்பீடு விஷயம் தான் தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது.

அதில், " நாட்டிற்கு எதற்கு கவர்னர்.? இந்த படத்திற்கு எல்லாம் எதுக்குயா ஹீரோயின்.?" என்று பேசிய வீடியோ வைரலாகி வருகின்றது. ஏற்கனவே ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டசபையில் இருந்து வெளியேறிய விஷயம் சர்ச்சையாகும் நிலையில் ப்ளூ சட்டை மாறனின் இந்த விமர்சனம் கடும் கண்டனங்களை பெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Blue Sattai Maran Varisu review make Controversy 


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->