8 தொகுதிகள் நிச்சயம்! 10 தொகுதிகள் லட்சியம்! செவி சாய்க்குமா அதிமுக! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் 10 தொகுதிகளை கேட்கும் பாஜக!

இன்று இரண்டு நாள் பயணமாக பாஜக தலைவர் ஜே.பி நட்டா தமிழகம் வர உள்ளார். இந்த பயணத்தில் மதுரை சிவகங்கை மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அவர் கட்சி நிர்வாகிகளுடன் உயர்மட்ட குழு ஆலோசனைக் கூட்டத்தையும் கூட்டியுள்ளார். 

இக்கூட்டத்தில் எதிர்வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பற்றிய முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அதிமுக கூட்டணியில் எத்தனை இடங்களை கேட்டு பெறுவது எந்தெந்த தொகுதிகளை பெறுவது என முடிவு எடுக்கப்படும் என செய்திகள் வெளியாகி உள்ளன. 

ஏற்கனவே 8 தொகுதிகளை தேர்ந்தெடுத்து அதற்கான களப்பணிகளை தமிழக பாஜக நடத்தி வருவதாகவும் அதிமுக கூட்டணியில் 10 தொகுதிகளை கேட்டுப் பெற வேண்டும். குறைந்தபட்சம் வெற்றி வாய்ப்பு உள்ள 8 தொகுதிகளையாவது பெற வேண்டும் என பாஜக முடிவு செய்துள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த உயிர் மட்டக்குழு கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல் முருகன், சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மற்றும் நயினார் நாகேந்திரன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். 

எண்ணிக்கையின் அடிப்படையில் 8 தொகுதிகள் என்றாலும் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் இது 20% ஆகும். சொற்ப வாக்கு வங்கி வைத்துள்ள பாஜகவிற்கு 8 தொகுதிகளை அதிமுக ஒதுக்குமா என்பது சந்தேகம்தான் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

பாஜக கேட்கும் தொகுதிகளை அதிமுக வழங்காத பட்சத்தில் சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து மூன்றாவது அணியை தமிழகத்தில் உருவாக்குமா? அல்லது அதிமுக வழங்கும் தொகுதிகளை பெற்றுக்கொண்டு கூட்டணியில் நீடிக்குமா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

மேலும் கடந்த சட்டமன்ற தேர்தலில் சுமார் மூன்று சதவீதம் வாக்கு வித்தியாசத்தில் அதிமுக ஆட்சியை இழந்தது. இதற்கு காரணம் பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் சிறுபான்மையினரின் ஓட்டு அதிமுகவுக்கு விழாதது என பரவலாக பேசப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP wants 10 seats in the AIADMK alliance


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->