மீண்டும் தொடங்கிய மோதல்.. "நட்டாற்றில் தத்தளித்தது மறந்து விட்டதா"..!! செல்லூர் ராஜூக்கு பாஜக பதிலடி..!! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தமிழகத்தில் தேர்தல் கூட்டணிக்கான முதற்கட்ட பணிகள் துவங்கியுள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை திமுக மற்றும் அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சியிலே பெரும்பாலும் வெற்றி பெற்றுள்ளன.  தமிழகத்தில் மூன்றாவது அணிக்கான முன்னெடுப்பு அனைத்து சமயங்களிலும் தோற்றுப் போய் உள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற பொது தேர்தலில் பாஜக ஆட்சி அமைக்கும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பல சமயங்களில் பேசி வருகிறார். ஆனால் தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இடம்பெற்று வரும் நிலையில் எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலிலும் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இடம்பெறும் என இரு கட்சி தலைவர்களும் உறுதி செய்துள்ளனர்.

ஆனால் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் 25 எம்பிக்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்புவோம் என்றும், வரும் 2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் எனவும் பல சமயங்களில் தெரிவித்து வருகிறார். இதனால் தமிழக பாஜக தலைவர்களுக்கும் அதிமுக தலைவர்களுக்கும் இடையே கருத்து மோதல் அவ்வப்போது எழுந்து வந்தது.

இந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தபோது நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி உறுதி செய்தார். மேலும் டெலியில் செய்திகளை சந்தித்தபோது அண்ணாமலைக்கும் தனக்கும் தனிப்பட்ட முறையில் எந்த பிரச்சனையும் இல்லையும் என விளக்கம் அளித்து இருந்தார். அதன்பிறகு இரு கட்சி நிர்வாகிகள் இடையான வார்த்தை போல் சற்று ஓய்ந்திருந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்த பொழுது அண்ணாமலை பாஜகவின் தயவால் அதிமுக வெற்றி பெற்றது எனக்கூறியதற்கு பதிலடி தந்திருந்தார். 

இந்த நிலையில் தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் பக்கத்தில் "பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறுவது போல் தேர்தலில் அவர்கள் தயவில் நாங்கள் வெற்றி பெற போவதில்லை. எங்களுடன் பயணித்தால் மட்டுமே அவர்களால் கரைசேர முடியும். இல்லாவிட்டால் நட்டாற்றில் போக வேண்டிய பரிதாபம் அவர்களுக்கு ஏற்படும் " : செல்லூர் ராஜூ. 

கரை சேர முடியாமல், பரிதாபமாக நட்டாற்றில் தத்தளித்துக் கொண்டிருந்தவர்களை நங்கூரமிட்டு பாதுகாத்த வரலாற்றை மறந்து விட்டு தானாகவே கரை சேர்ந்ததாக எண்ணிக் கொண்டிருப்பவர்கள், 'இனி நங்கூரம் தேவையில்லை' என்ற அலட்சியப்படுத்தும் போக்கு தான் பரிதாபத்திற்குரியது" என செல்லூராஜுக்கு பதிலடி தந்துள்ளார். இதனால் அதிமுக மற்றும் தமிழக பாஜக நிர்வாகிகள் இடையே மீண்டும் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. நாளை மறுநாள் உள்துறை அமைச்சர் தமிழகம் வர உள்ள நிலையில் அதிமுக நிர்வாகிகள் அவரை சந்திக்க திட்டமிட்டுள்ளனர் என்பதை குறிப்பிடத்தக்கது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP responds to Sellur Raju comment


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->