தனித்துப் போட்டி.. அதிமுக கூட்டணியில் இருந்து விலகும் கட்சி.? - Seithipunal
Seithipunal


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சி தனித்துப் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதியை ஜனவரி மாதம் இறுதிக்குள் அறிவிக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒத்தி வைக்க உத்தரவிட முடியாது என இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள், 646 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. சமீபத்தில் இதுகுறித்து அனைத்து கட்சி கூட்டத்தை மாநில தேர்தல் ஆணையம் கூடியது. அப்போது ஒரே கட்டமாக தேர்தல் நடத்த திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தியது. விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. 

இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னை தி நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்ற பாஜகவின் மைய குழு கூட்டத்தில், இது குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

தமிழகம் முழுவதும் பாஜகவுக்கு மக்கள் ஆதரவு பெருகி வருவதை கருத்தில் கொண்டு, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட கட்சியினர் ஆர்வமுடன் விரும்பும்போது அளித்துள்ளனர். இவர்களில் பலர் தனித்து போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

திமுகவின் அதிகார பலத்தை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும், அவர்கள் தெரிவித்துள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து மைய குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்களை டெல்லி மேலிடத்திற்கு தெரிவிக்கப்படும். தேர்தலில் தனித்து போட்டியா.? அல்லது கூட்டணியா.? என்பது குறித்து இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படும் என தமிழக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP may be stands alone in urban local body election


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->