பா.ஜ.க.வுக்கு எதிர்காலம் இல்லை... மக்களின் மனம் திமுகவோடு...! - ரகுபதி களைகட்டும் பேச்சு - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி, பல முக்கியமான அரசியல் மற்றும் சமூக விடயங்களை பற்றி கருத்து தெரிவித்தார்.அவர் தெரிவித்ததாவது,"தமிழ்நாட்டிலிருந்து வெளிமாநிலங்களுக்கு வேலைக்காக புறப்படுபவர்கள் அங்கேயே நிரந்தரமாக தங்கி விடுகின்றனர்.

ஆனால் பீகார், ஒடிசா, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டுக்கு வருபவர்கள், கோயம்புத்தூர், திருப்பூர், திருச்சி, திருநெல்வேலி போன்ற பகுதிகளில் சில மாதங்கள் மட்டுமே வேலை செய்து, பின்னர் தங்கள் ஊர்களுக்கு திரும்பி விடுகிறார்கள்.இவர்கள் தற்காலிகமாக வேலைக்காக வருபவர்கள் மட்டுமே, நிரந்தர வாசிகளாக கருத முடியாது.

வாக்களிக்கும் உரிமை என்பதும் நிரந்தர வாசிகளுக்கே உரியது,” என அவர் வலியுறுத்தினார்.இதைத் தொடர்ந்து அமைச்சர் ரகுபதி தெரிவித்ததாவது,"2026 தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாட்டில் பா.ஜ.க. என்பதே வரலாறு ஆகிவிடும். திமுக 2.0 ஆட்சியே மக்களின் நம்பிக்கையைத் தொடர்ந்து வெற்றி பெறும்.விவசாயிகளுக்கு இழப்பீடு தேவைப்படும் போதெல்லாம், அரசு உடனடியாக நிவாரணம் வழங்குகிறது.

நயினார் நாகேந்திரன் தன்னிடம் உள்ள தலைவரின் பதவியை தக்க வைத்துக் கொள்ள என்ன பேச்சும் பேச தயாராக உள்ளார். ஆனால் அதனால் மக்களின் மனம் மாறாது.

புதிய கூட்டணிகள் எதுவும் பா.ஜ.க.வுக்கு உயிர் கொடுக்கப் போவதில்லை. கேரளா பிஎம்சி திட்டத்தில் சேர்ந்தது அவர்களது விருப்பம்,அதில் எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் எங்களது கொள்கையும் பணியும்தான் தமிழ்நாட்டை முன்னேற்றி வருகிறது” எனத் தெளிவாக தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJP has no future Peoples hearts DMK Raghupathi speech


கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...



Advertisement

கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...




Seithipunal
--> -->