90 மி.லி சரக்கு ஐடியா.. குடிமகன்களின் லட்சியத்தை செயலிழக்க முயற்சி.. அமைச்சரை பங்கம் செய்த பாஜக.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பாக நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி, தமிழ்நாடு தலைமைச் செயலாளர் அமுதா மற்றும் துறை செயலாளர்கள், முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி டாஸ்மாக் கடைகளில் பாட்டில்கள் உபயோகப்படுத்துவதால் ஏற்படும் சிரமங்களை, பிரச்சனைகளை குறைக்க டெட்ரா பாக்கெட் கொண்டு வருவதை டாஸ்மாக் பணியாளர்கள் சங்கமும், பொதுமக்களும் வரவேற்றுள்ளனர் எனவும், தற்பொழுது டாஸ்மாக் கடைகளில் 180 மி.லி அளவில் மட்டுமே மதுபானம் விற்கப்படுவதால் மது பிரியர்களின் சிரமத்தை போக்கிவிடும் வகையில் 90 மி.லி அளவில் மதுபானம் விற்கவும் முடிவு செய்துள்ளதாக அறிவித்தார்.

அமைச்சர் முத்துசாமியின் இந்த அறிவிப்பை தமிழ்நாடு பாஜக மாநில துணைத்தலைவர் நாராயண திருப்பதி தனத்துக்கு ட்விட்டர் பக்கத்தில் "40 சதவீதம் பேர் 180 மி.லி. கொள்ளளவு குவார்ட்டர் பாட்டிலை பகிர்ந்து கொள்வதற்கு, மற்றொருவர் வருகைக்காக காத்திருக்கின்றனர். எனவே 90 மி.லி பாக்கெட் இருந்தால் பிரச்சினை தீர்ந்து விடும்" . - அமைச்சர் முத்துசாமி. 

'பகிர்ந்து உண்ணுதல்' என்ற அபார கொள்கையை கடை பிடிக்கும் குடிமகன்களின் லட்சியத்தை செயலிழக்கச் செய்து விடுமல்லவா இந்த முயற்சி?" என பங்கமாக கலாய்த்து உள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bjp criticized minister Muthusamy announcement


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->