ஜெயலலிதா மீது எனக்கு மதிப்பும், மரியாதையும் எப்போதும் உண்டு - பாஜக அண்ணாமலை.! - Seithipunal
Seithipunal


சென்னை கமலாலயத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது,  போக்குவரத்து துறையில் பணி நியமன மோசடியில் ஈடுபட்டதாக செந்தில் பாலாஜி மீது வழக்கு உள்ளது. நீதிமன்ற வழிகாட்டுதலின் பேரில் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

அந்த வகையில் செந்தில் பாலாஜி மீது விசாரணை நடத்த நீதிமன்றமே உத்தரவிட்ட பிறகு தலைமைச் செயலகம் மற்றும் செந்தில் பாலாஜி வீடு அலுவலகங்களில் சோதனை நடந்தது எப்படி அரசியல் கால் புணர்ச்சியாகும்? இதற்கு முன் தலைமைச் செயலகத்தில் நடந்த சோதனையின் போது முதலமைச்சர் ஸ்டாலின் என்ன சொல்லியிருந்தார் என்பதை யோசிக்க வேண்டும்.

உச்சநீதிமன்றமே செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க 2 முறை தமிழக காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. உச்சநீதிமன்றமே குற்றவாளி என சொன்னவரே ஓமந்தூராரில் ஓய் முதல்வர் சந்திப்பது சரியா? செந்தில் பாலாஜி விஷயத்தில் கடுகு அளவு கூட அரசியல் காழ்புணர்ச்சி இல்லை இது அரசியல் பழிவாங்கும் செயலும் இல்லை.

உச்சநீதிமன்ற தீர்ப்பு பல இடங்களில் தெளிவாக கூறியிருக்கிறது ஆட்கொணர்வு மனு விசாரணையின் போது அமலாக்க துறை அதிகாரிகள் அதற்கான பதிலை நீதிமன்றத்தில் அளிப்பார்கள்.

அதேபோல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது எனக்கு மதிப்பும் மரியாதையும் எப்போதும் உண்டு. ஆனால், நீதிமன்ற தீர்ப்பு குறித்து எது உண்மையோ அதைத்தான் நான் கூறினேன். ஆனால் அதிமுகவினர் தவறாக புரிந்து கொண்டு விமர்சனம் செய்கின்றனர். அவர்கள் போல் நானும் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்ய விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP annamalai speech about Jayalalithaa and minister senthil Balaji


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->