ஓ.பி. எஸ்ஸா? ஈ.பி.எஸ்ஸா? அதிமுகவில் நான் இவர் பக்கம் தான்.. இயக்குனர் பாக்யராஜ் பேட்டி.!  - Seithipunal
Seithipunal


அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஒன்றிணைந்து செயல்பட்டு வந்த எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் இருவரும் தற்போது பிளவுபட்டு நிற்கின்றனர். அத்துடன் சசிகலா, தினகரன் தனிக்கட்சி துவங்கி நடத்தி வருகின்றனர்.

திமுக ஆட்சியைப் பிடித்ததற்கு அதிமுகவின் பிளவு ஒரு முக்கிய காரணமாக இருந்தது என்று கூறினால் அது மிகையாகாது. இப்படிப்பட்ட சூழலில் அண்ணன், தம்பியாக செயல்பட்டு வந்த பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இருவரும் தற்போது ஒருவருக்கு ஒருவர் முரணாகி இருக்கின்றனர்.

சமீபத்தில் நடந்த பொது குழுவில் எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், அந்த பொதுக்குழு செல்லாது என்று நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இருவரும் சேர்ந்து செயல்பட வேண்டும் என்று நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் எடப்பாடி பழனிசாமி அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. தொடர்ந்து, மேல்முறையீடு செய்தார். அதற்கான வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என்று பாஜக விருப்பம் தெரிவித்துள்ளது.

இத்தகைய சூழலில் இயக்குனரும், நடிகருமான பாக்யராஜ் மயிலாப்பூரில் இருக்கும் தனியார் ஹோட்டலில் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்துள்ளார். அதன் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், " நான் அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்படுவேன். தேவை ஏற்பட்டால் கட்சியிலிருந்து திரும்பி சென்றவர்களை நானே தேடிச்சென்று ஒருங்கிணைக்க முற்படுவேன்." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bakyaraj Press meet after Meet ops


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->